சிறு வயதிலேயே மரணமடைந்த பாடகி சித்ராவின் மகள்.. நினைவு நாளில் சித்ரா வெளியிட்ட பதிவு
சின்ன குயில் சித்ரா
உலக புகழ் பெற்ற பின்னணி பாடகியாக வலம் வருகிறார் கே.எஸ். சித்ரா. இவரை சின்ன குயில் சித்ரா என தமிழ் திரையுலகில் செல்லமாக அழைப்பார்கள். இவர் இளையராஜா இசையமைத்த சிந்து பைரவி படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடினார். அன்றில் இருந்து இன்று வரை இவருடைய குரலுக்கு அடிமையோர் பல கோடிப்பேர் உள்ளனர். இவர் விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு நந்தனா என்கிற மகள் 2002ம் ஆண்டு பிறந்தார். ஆனால், 2011ம் ஆண்டு சித்ராவின் மகள் மரணமடைந்துவிட்டார்.
மகளின் நினைவு நாள்
இந்த நிலையில், தனது மகளின் நினைவு நாளான நேற்று, பாடகி சித்ரா பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் "உன்னை இனி என்னால் தொட முடியாது, உன் பேச்சை கேட்க முடியாது, உன்னை பார்க்க முடியாது. ஆனால், நீ என் இதயத்தில் இருப்பதால் உன்னை எப்போதும் உணர முடிகிறது. என் அன்பே, நாம் மீண்டும் ஒரு நாள் சந்திப்போம். உன்னை இழந்த வலி அளவிட முடியாதது. வானத்தில் பிரகாசிக்கும் மிகப்பெரிய நட்சத்திரம் நீ தான் என்பதை நான் அறிவேன். படைப்பாளர்களின் உலகில் நீ நன்றாக வாழ்கிறாய் என்று நான் நம்புகிறேன்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.