முத்து படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமார் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
முத்து படம்
இயக்குனர் பாலச்சந்தரின் கவிதாலயா ஃபிலிம்ஸ் நிநுவனம் தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தயாரான படம் முத்து.
ரஜினி நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான இப்படம் மலையாளத்தில் உருவான தேன்மாவின் கொம்பத்து என்ற படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ரஜினியை தாண்டி ஜெயபாரதி, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடிக்க படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் செம சூப்பர் டூப்பர் ஹிட்.
சம்பளம்
சமீபத்தில் ஒரு பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார்-பாலசந்தர் அவர்களுடனான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
முத்து பட படப்பிடிப்பில் எனது சம்பளம் எவ்வளவு என ரஜினி கேட்டார், நான் ரூ. 12 லட்சம் என்றேன்.
இதைக்கேட்டதும் ரஜினி சார் இந்த படத்திற்கு ரூ. 15 லட்சம் எழுதி அனுப்பினார் போல, அதைப் பார்த்து பாலசந்தர் சார் என்ன உனக்கு சம்பளம் ரூ. 15 லட்சமா என்று ஷாக் ஆனார்.
நானெல்லாம் ரூ- 15 லட்சம் பார்த்ததே இல்லை, ரூ. 5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கியது இல்லடா என்று பாலசந்தர் சார் சொன்னார் என கூறியுள்ளார்.