நாட்டாமை படத்தில் வரும் Mixer Uncle யார், என்ன வேலை செய்தார்- ஓபனாக கூறிய கே.எஸ்.ரவிக்குமார்
நாட்டாமை
கமர்ஷியல் ஹிட் படங்களின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை.
சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து அசத்திய இந்த படத்தில் குஷ்பு, மீனா, விஜயகுமார், பொன்னம்பலம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள். படம் வெளியாகி 30 வருடங்களுக்கு மேல் ஆகிறது.
ஆனாலும் இந்த படத்தை தொலைக்காட்சியில் எப்போது போட்டாலும் மக்கள் கொண்டாடுவார்கள்.
மிக்சர் வேடம்
இந்த படத்தில் செந்தில்-கவுண்டமணி காமெடி சோசியல் மீடியாவில் மீம்ஸ் கன்டென்ட் ஆக இருக்கிறது. ஒரு காட்சியில் கவுண்டமணி பெண் பார்க்கும் போது ஒரு நபர் உட்கார்ந்து மிக்சர் சாப்பிட்டு இருப்பார்.
அவர் யார் என்றும் எப்படி படத்திற்குள் வந்தார் என்பது குறித்தும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.
அதில் அவர், மிக்சர் மாமா வேடத்தில் நடித்தவர் என் படத்தில் பணியாற்றிய எலக்ட்ரீசியன், நான் எந்த நம்பர் லைட்டை ஆன் பண்ண சொல்கிறேனோ அதை செய்வார், அது மட்டும் தான் செய்வார்.
அந்த இடத்தை விட்டு நகரவே மாட்டார், வேறு வேலை சொன்னால் நான் எலக்ட்ரீசியன் சார், எலக்ட்ரிக்கல் வேலை வந்தால் சொல்லுங்கள் சார் செய்கிறேன் என்பார். இதனை மனதில் வைத்துக்கொண்டு அந்த காமெடி சீனிற்கு அவரை நடிக்க வைத்தேன்.
முதலில் மறுத்தவர் ஸ்விட்ச் முன் உட்கார்ந்து பொரி, வேர்க்கடலை சாப்பிடுவதைப் போல இங்கே மிக்சர் தருகிறேன் என கூறி சம்மதிக்க வைத்து பட்டய போட்டு நடிக்க வைத்தேன் என தெரிவித்துள்ளார்.