விஜய் TVK மாநாட்டில் பேசிய அந்த விஷயத்தில் என்ன தவறு உள்ளது... கே.எஸ்.ரவிக்குமார்
TVK மாநாடு
நடிகர் விஜய் என்பதை தாண்டி இப்போது தமிழக வெற்றிக் கழக தலைவராக அவரை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
ஒவ்வொரு ஸ்டெப்பாக கட்சியின் விஷயங்களை பார்த்து பார்த்து செய்துவரும் விஜய் விக்கிரவாண்டியில் தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
பின் சமீபத்தில் விஜய் கட்சியின் 2வது மாநாடு மதுரையில் படு பிரம்மாண்டமாக நடந்தது, அங்கு அவருக்காக கூடிய கூட்டத்தை கண்டு எல்லோருமே மிரண்டார்கள்.
கே.எஸ்.ரவிக்குமார்
மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் பல வைரலானது, அரசியல் பிரபலங்கள் பலரும் நிறைய கருத்து தெரிவித்து வந்தனர். அதில் முக்கியமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை விஜய் அங்கிள் என கூறியது குறித்து நிறைய விமர்சனம் வந்தது.
இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் குறை சொல்லும் நோக்கத்தில் அங்கிள் என சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. நேரில் பார்த்தால் கூட, நல்லா இருக்கீங்களா அங்கிள் என்றே கேட்பார் விஜய்.
அதையே பொதுவெளியில் Commercial செய்து பேசியுள்ளார். ஆனால் அந்த வார்த்தையை வேறு மாதிரி எடுத்துக்கொண்டு சிலர் பேசுகின்றனர். நாட்டுக்கு என்ன தேவையோ நல்லதோ அதை பாருங்கள், செய்யுங்கள் என கூறியுள்ளார்.

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
