லிங்கா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா? உண்மையை கூறிய இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்
லிங்கா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் இதுவரை பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் வந்துள்ளது. படையப்பா, முத்து போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இதன்பின் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் லிங்கா. கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. சிலர் அது தோல்வி படம் என்றும் கூறினார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
இந்த நிலையில், தோல்வி படம் என கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், லிங்கா படத்தின் வசூல் குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதில், "லிங்கா மிகப்பெரிய வெற்றிப்படம் இப்பவும் ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று சொல்வார். ரூ. 180 கோடி வசூல் செய்தது அந்த படம்" என கூறியுள்ளார்.

SBI JanNivesh SIP முதலீட்டு திட்டம்.., குறைந்தபட்சமாக ரூ.250 முதலீடு செய்து ரூ.7 லட்சம் பெறலாம் News Lankasri

இமயமலையால் அடித்த ஜாக்பாட்.. பாகிஸ்தானில் தங்கச் சுரங்கம்- கோடிக்கணக்கில் கிடைக்க போகுது! IBC Tamilnadu
