மீண்டும் முக்கிய தொடரில் நடித்த நடிகை குஷ்பூ! எந்த சீரியல் தெரியுமா?
நடிகை குஷ்பூ நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார், அப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் குஷ்பூ குறைவாகவே நடித்து வருகிறார், அந்த வகையில் கடைசியாக இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது குஷ்பூ சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார், ஆம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை என்ற தொடரில் குஷ்பூ சிறப்பு தோற்றத்தில் வந்துள்ளார்.
நடிகை குஷ்பூவுடன் பிரபல நடிகர் வையாபுரியும் சிறப்பு தோற்றத்தில் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்