குபேரா படத்தின் சென்சார் முடிந்தது.. ரன் டைம் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
குபேரா
தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு குபேரா மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. இதில் வருகிற 20ம் தேதி ரிலீஸாக உள்ள திரைப்படம்தான் குபேரா.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சென்சார்
இந்த நிலையில், குபேரா திரைப்படத்தின் சென்சார் சமீபத்தில் நடந்துள்ளது. இப்படத்தின் U/A 13+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 15 நிமிடம் என சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 மணி நேர ரன் டைம் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். இதனால், இப்படத்தின் ரன் டைமை 3 மணி நேரத்திற்குள் கொண்டு வர படக்குழு முயற்சி செய்து வருகிறார்கள் என தகவல் கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri