குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
குபேரா
இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த குட் பேட் அக்லி, குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் பேமிலி, மாமன், மதகஜராஜா ஆகிய திரைப்படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
அதே போல் தக் லைஃப், விடாமுயற்சி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தன. இந்த நிலையில், முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையில் இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் குபேரா.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
வசூல் சாதனை
ஆனாலும் கூட குட் பேட் அக்லி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களின் வசூலை ஒரே நாளில் தாண்டியுள்ளது குபேரா. தெலுங்கில் குபேரா படம் முதல் நாள் மட்டுமே ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் குட் பேட் அக்லி, தக் லைஃப் படங்கள் தெலுங்கில் முதல் நாள் செய்த மொத்த வசூலையும் குபேரா தாண்டியுள்ளது.

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

காணாமல் போன 4,000 டன் நிலக்கரி.., மழையால் அடித்துச் சென்றதாக அமைச்சர் சர்ச்சை விளக்கம் News Lankasri
