8 நாட்களில் குபேரா படம் உலகளவில் எவ்வளவு வசூல் தெரியுமா.. இதோ
குபேரா
தெலுங்கில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சேகர் கம்முலா. இவர் இயக்கத்தில் முதல் முறையாக தனுஷ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் குபேரா.
வாத்தி திரைப்படத்தை தொடர்ந்து இது தனுஷின் இரண்டாவது தெலுங்கு திரைப்படமாகும். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழகத்தில் தோல்வியடைந்துள்ள இப்படம், தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் ஆகியுள்ளது.
சமீபத்தில் கூட படக்குழுவினர் தெலுங்கில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தில் சிரஞ்சீவியும் கலந்துகொண்டனர். மேலும் தெலுங்கில் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.
வசூல்
குபேரா படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 8 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குபேரா திரைப்படம் உலகளவில் 8 நாட்களில் 118 கோடி வசூல் செய்துள்ளது.

வெறும் 10 வருடங்களில் முகேஷ் அம்பானியை விடவும் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய 42 வயது நபர் News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

இந்தியர்கள் குறித்து விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர்: மன்னிப்புக் கோர பிரதமர் வலியுறுத்தல் News Lankasri
