நடிகர் மணிகண்டன் குறித்து பேசிய குடும்பஸ்தன் பட நடிகை சான்வி மேக்னா.. எப்படிபட்டவர்?
குடும்பஸ்தன்
ஜெய் பீம், லவ்வர், குட் நைட் போன்று நல்ல கதைக்களத்தை கொண்ட படங்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் மணிகண்டன்.
இவரது நடிப்பில் கடைசியாக கடந்த ஜனவரி 24ம் தேதி குடும்பஸ்தன் என்ற படம் வெளியாகி இருந்தது. மணிகண்டனுடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோம சுந்தரம், ஆர் சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரஸ்யங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்டி இருப்பார்கள். இந்த படம் ரூ. 28 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை பேச்சு
இந்த நிலையில் குடும்பஸ்தன் படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சான்வி மேக்னா, நடிகர் மணிகண்டன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், உங்களைப் போல திறமை வாய்ந்த நடிகரோடு பணிபுரிந்தது ஓர் அழகான அனுபவம், குடும்பஸ்தன் படம் மூலம் அருமையான இணை நடிகர் மட்டுமின்றி சிறந்த நண்பரும் கிடைத்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.