2 நாட்களில் குடும்பஸ்தன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குடும்பஸ்தன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். நடிப்பு, டப்பிங், மிமிக்கிரி என பன்முக திறமைகொண்ட இவர், விஜய் டிவியின் மூலம் தனது பயணத்தை துவங்கி, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகியுள்ளார்.
ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என மக்களால் பாராட்டப்பட்டார். பின் குட், லவ்வர் என தரமான திரைப்படங்களை கொடுத்தார். இவருடைய நடிப்பில் கடந்த 24ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் தான் குடும்பஸ்தன்.
அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கியிருந்தார். மேலும் குருசோமசுந்தரம், சான்வி மேக்னா, ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
மக்கள் மத்தியில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 4.2 கோடி வசூல் செய்துள்ளது.

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
