வசூலை வாரிக்குவிக்கும் குடும்பஸ்தன்.. 8 நாட்களில் இத்தனை கோடியா
குடும்பஸ்தன்
மணிகண்டன் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றால், அது கண்டிப்பாக நல்ல படமாகவும் மக்களின் மனதில் இடம்பிடிக்கக்கூடிய படமாகவும் இருக்கும். அந்த அளவிற்கு மக்களிடையே நம்பிக்கையை சம்பாதித்துள்ளார் நடிகர் மணிகண்டன்.
குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து ஹீரோவாக குடும்பஸ்தன் படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளார். அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து ஆர். சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம் நடித்திருந்தனர்.
மேலும் இப்படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாகியுள்ளார் சான்வி மேக்னா. இவருடைய நடிப்பும் மக்களால் பாராட்டப்பட்டது.
வசூல் விவரம்
இந்த நிலையில், 8 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள குடுபஸ்தான் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 8 நாட்களில் ரூ. 12.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.