மாபெரும் வெற்றியடைந்த குடும்பஸ்தன்.. இதுவரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா
மணிகண்டன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். எழுத்தாளராக, டப்பிங் கலைஞராக திரையுலகில் வலம் வந்த இவரை தற்போது, ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஜெய் பீம் படத்தில் வரும் ராஜாக்கண்ணு போல் சீரியஸான கதாபாத்திரத்திலும் சரி, குட் நைட் படத்தில் வரும் மோகன் என்கிற கலகலப்பான கதாபாத்திரத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்டுத்தி இருந்தார்.
குடும்பஸ்தன்
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன். அறிமுக இயக்குநரான ராஜேஸ்வர் காளிசாமி இப்படத்தை இயக்கியிருந்தார். யதார்த்தமான கதைக்களத்தில் உருவான இப்படம் மக்கள் மனதில் இடம்பிடித்தது.
வசூல்
இந்த நிலையில், இதுவரை இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குடும்பஸ்தன் படம் உலகளவில் இதுவரை ரூ. 21 கோடிக்கும் மேல் வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கிகள் கவனத்திற்கு; இங்கு கூடுதல் விலைக்கு மதுவகை விற்கப்படுவதில்லை - போஸ்டரால் பரபரப்பு! IBC Tamilnadu

Serial update: குணசேகரனுக்கு எதிராக சதிச் செய்யும் கதிர்- வசமாக சிக்கிய மகன்.. அதிகாரியின் அதிரடி Manithan
