குடும்பஸ்தன் திரை விமர்சனம்
குடும்பஸ்தன்
மணிகண்டன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
இவர் நடிப்பில் ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்துள்ள குடும்பஸ்தன் அவரின் வெற்றி பாதையை மேலும் அதிகப்படுத்தியதா, பார்ப்போம்.
கதைக்களம்
மணிகண்டன் படத்தின் ஆரம்பத்திலேயே தன் காதலியை வீட்டை எதிர்த்து ரிஜிஸ்டர் கல்யானம் செய்கிறார். இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், இவர்கள் முன்பு நன்றாக வாழ வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
மணிகண்டன் அக்கா கணவர் குரு சோமசோந்தரம் பயங்கர குடச்சல் பார்ட்டியாக மணிகண்டனுக்கு இருக்கிறார். அவர் எப்படா மணிகண்டன் சறுக்குவார் அவமானப்படுத்தலாம் என்றே இருக்கிறார்.
அந்த நேரத்தில் ஒரு பிரச்சனையால் மணிகண்டனுக்கு வேலை போக, அதை மறைக்கு பல பொய், கடன் என வாழ்க்கை நகர்ந்து வருகிறது.
இந்த தருணத்தில் மணிகண்டன் அப்பா-அம்மா 60வது கல்யாணத்தில் மணிகண்டன் வேலை போனது குரு சோமசுந்தரத்துக்கு தெரிய வர, மைக் போட்டு அதை சொல்லி அவமானப்படுத்த, மணிகண்டன் மீண்டும் வாழ்க்கையில் ஜெயித்தாரா இவர்கள் முன்பு, தன் குடும்ப செலவு மற்றும் பிரச்சனைகளை தீர்த்தாரா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
மணிகண்டன் தேர்வு செய்தாலே அது நல்ல படம் நல்ல கதாபாத்திரம் என்பதை மீண்டும் நிரூபணம் செய்துவிட்டார். அத்தனை யதார்த்தத்தை தன் கதாபாத்திரம் வாயிலாக கொண்டு வந்துள்ளார்.
ஆரம்பத்தில் ஜாலியாக சென்றாலும் வாழ்க்கையில் வேலை இழந்து வேலை தேடும் போதும், பேக்கிரி வைத்து அதில் நஷ்டம் அடையும் போது அவரின் விரக்தி ஒவ்வொரு சாமனியனின் விரக்தியை வெளி கொண்டு வந்துள்ளார்.
அதிலும் கடன்காரனுக்கு பயந்து காமன் கக்கூஸ்-ல் உட்கார்ந்து இருப்பது, இந்த பணம் இல்லாத நவீன்(மணிகண்டன்) அம்மா, அப்பா, மனைவிக்கு தேவையில்லை என்று பேசுமிடம் சபாஷ்.
குரு சோமசுந்தரம் ஒவ்வொரு குடும்பத்தில் இருக்கும் ஒரு இரிட்டெட் கதாபாத்திரத்தை அபப்டியே வெளியே கொண்டு வந்துள்ளார், அதிலும் அவர் சிரிப்பு மணிகண்டன் தாண்டி நமக்குமே எரிச்சலே, அது தான் அந்த கதாபாத்திர வெற்றி.
பல இன்ஸ்டா பிரபலங்களை அந்த கதாபாத்திரங்களாகவே படத்தில் அங்கங்கே பயன்படுத்தியது சூப்பர், அதோடு மணிகண்டன் நண்பர், உறவினர் என ஒரு 4 பேர் எப்போதும் குடித்துக்கொண்டு செய்யும் அட்டகாசம் கலகலப்பிற்கு பஞ்சமில்லை.
படத்தின் கிளைமேக்ஸ் சிரிப்பு சரவெடி என்றாலும், ஒவ்வொருவரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்வது செய்வது ரசிக்கும் படி இருந்தது, இந்த சிவப்பு சிலை இருந்ததால தான் என் மாமியார் என்னைய மதிச்சா என்று மணிகண்டன் அம்மா சொல்லுமிடத்தில், அப்றம் நீங்கள் மட்டும் ஏன் என்னை மதிக்கவில்லை என மணிகண்டன் மனைவி கேட்கும் இடமெல்லாம் சூப்பர் ரைட்டிங்.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தாலும் மிக அழகாக கையாண்டு உள்ளனர், அதிலும் வைசாக் இசை கூடுதல் பலம்.
க்ளாப்ஸ்
படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை.
மணிகண்டன், குரு சோமசுந்தரம் என அனைவரின் நடிப்பும். படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், வசனம்
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றுமில்லை, கொஞ்சம் ஆங்கங்கே சில யுடியூப் வீடியோக்கள் பார்ப்பது போன்ற உணர்வு
மொத்தத்தில் ஒவ்வொரு குடும்பஸ்தர்களும், நாளை குடும்பஸ்தர்கள் ஆக போகிறவர்களும் தவறாமல் பார்க்க(கொண்டாட) வேண்டும் திரைப்படம்.