குண்டாக இருந்த அனுஷ்காவையே இப்படி மாற்றியுள்ளார்களே! பாகுபலி படத்தின் பின்னணி..
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றியடைந்தது.
மேலும் மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் CGI மற்றும் VFX மூலமாகவே எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இப்படத்தில் நடிப்பதற்கு முன் நடிகை அனுஷ்கா Size Zero படத்திற்காக தனது உடல் எடையை அதிகமாக வைத்திருந்தார். ஆனால் பாகுபலி படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை குறைத்து செம பிட்டான தோற்றத்தில் நடித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது அனுஷ்கா பாகுபலி படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்மறையான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், அனுஷ்கா அப்படத்தில் குண்டான தோற்றத்தில் தான் நடித்துள்ளார்.
ஆனால் CGI மற்றும் VFX உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவரை பிட்டாக காண்பித்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் புகைப்படங்களை ஒப்பிட்டு பரப்பி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்