குண்டக்க மண்டக்க பட இயக்குனர் திடீர் மரணம்!
குண்டக்க மண்டக்க
குண்டக்க மண்டக்க என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது பார்த்திபன் தான். அதற்கு அர்த்தம் கேட்டு அவர் வடிவேலுவிடம் ரகளை செய்யும் காமெடி காட்சி மிக பிரபலம்.
தற்போது செய்தி அந்த காமெடி பற்றியது அல்ல. பார்த்திபனின் 'குண்டக்க மண்டக்க' என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.அசோகன் தற்போது காலமானார் என்கிற செய்தி வந்திருக்கிறது.

இயக்குனர் அசோகன் மரணம்
64 வயதாகும் இயக்குனர் அசோகன் சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்று இறுதி சடங்குகளை நடைபெற இருக்கிறது.
குண்டக்க மண்டக்க மட்டுமின்றி மேலும் 2 படங்களையும் அவர் இயக்கி இருக்கிறார். அசோகனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர்.

Also Read: அஜித் - வடிவேலு பிரச்சனைக்கு இந்த ஒரு வார்த்தை தான் காரணம் ! சக காமெடி சொன்ன அதிர்ச்சி தகவல்