குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் பட நாயகி தனன்யாவை நியாபகம் இருக்கா?- செம மாடனாக ஆளே அடையாளம் தெரியலையே?
குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்
தமிழ் சினிமாவில் புதுமுகங்களை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளது, சில படங்கள் நல்ல ஹிட், ஒரு சில படங்கள் வந்த சுவடே இல்லாமல் போய்விடும்.
கடந்த 2008ம் ஆண்டு சரண் தயாரிப்பி ராஜ்மோகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்.
இந்த படத்தின் சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த செல்வம் என்பவர் நாயகனாக நடிக்க தனன்யா என்பவர் நாயகியாக நடித்தார்.
மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான்.
நாயகி லேட்டஸ்ட்
காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் தனன்யா.
படத்தில் மட்டுமே நாம் பார்த்த அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது அவர் நல்ல கலராக, செம மாடனாக புடவையில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக அட இவரா அந்த பட நாயகி என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.