"எனது மகள்கள் இருவரும் விஜய்யின் தீவிர ரசிகர்கள்" - நடிகை குஷ்பூ சொன்ன சூப்பர் தகவல்..
தமிழ் சினிமாவின் 90-களில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர் குஷ்பூ.
இவர் ரஜினி, கமல், கார்த்தி, பிரபு, மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியானார்.
மேலும், தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே சமீபத்தில் குஷ்பூ உடல் எடையை குறைத்து செம சூப்பர் லுக்கில் அவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் குஷ்பூ பேட்டி ஒன்றில் அவரின் மகள்கள் குறித்து பேசியுள்ளார். அதில் "எனது இருமகள்களும் விஜய்யின் தீவிர ரசிகர்கள். விஜய் படம் ரிலீஸ் என்றால் அவரின் பட டீ-ஷர்டை தான் அணிந்து கொண்டு இருப்பார்கள்.
ஒரு நாள் விஜய்யை சந்திக்க எனது மகள்களை கூட்டிச்சென்றேன், ஆனால் அவர்கள் விஜய்யை பார்த்ததும் வெட்கப்பட்டு எனது பின்னே ஒளிந்துகொண்டார்கள்" என தெரிவித்துள்ளார்.