தனது கணவருக்கு முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட நடிகை குஷ்பூ.. அழகிய ஜோடியின் புகைப்படத்தை பாருங்க
ரஜினி நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை குஷ்பூ.
இதன்பின் பல திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை குஷ்பூ, சுந்தர். சி இயக்கத்தில் உருவான முறை மாமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இதனால் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இரு பெண் பிள்ளைகள் இருப்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில் இன்று இயக்குனர் சுந்தர்.சியின் பிறந்தநாள் என்பதினால், தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பூ.
மேலும் தனது மகள்களுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படத்தையும் வெளியிட்ட இயக்குனர் சுந்தர்.சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

