"ரஜினி சார் இன்னும் மாறவில்லை" - அண்ணாத்த ஷூட்டிங்கில் நடந்த விஷயத்தை பகிர்ந்த குஷ்பூ !
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளது தெரிந்த விஷயம். அதன்படி தற்போது நடிகை குஷ்பூ அண்ணாத்த ஷூட்டிங்கில் நடந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது "இத்தனை வருடங்களில் அவர் மாறி இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் அப்படியே இருக்கிறார். ஷாட் இடைவேளையின் போது, மீனாவும் நானும் பேசிக்கொண்டு இருந்தோம். ரஜினி சார் அவரின் படப்பிடிப்பு முடிந்ததும் தனது கேரவனுக்குச் செல்லாமல், எங்களுடன் அரட்டையில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார்".