இது தெரிந்திருந்தால் ரஜினியோட அந்த படத்தில் நடித்திருக்க மாட்டேன்.. குஷ்பு சொன்ன ரகசியம்
குஷ்பு
தமிழில் வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தார் குஷ்பு.
பீக்கில் இருந்தபோதே இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திடா என இரு மகள்கள் உள்ளனர்.
குஷ்பு நடிகை என்பதை தாண்டி அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், முன்பு பேட்டி ஒன்றில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் குறித்து சில விஷயங்களை குஷ்பு பகிர்ந்துள்ளார்.
அதிர்ச்சி தகவல்
அதில், "முதலில் அண்ணாத்த படம் குறித்து இயக்குனர் என்னிடம் கூறியபோது நானும் மீனாவும் மட்டும்தான் படத்தில் லீட் கேரக்டர்களில் நடிக்க உள்ளோம். ரஜினிக்கு ஜோடி கிடையாது என்று தெரிவித்தார்.
ஆனால், ஷூட்டிங் நடக்கும்போது தான் நயன்தாரா கதாநாயகி என்பது தெரிய வந்தது. இதனால், எங்கள் காட்சிகள் படத்தின் இடைவேளை வரை மட்டுமே வந்தது. இதன் காரணமாக, இந்த கேரக்டர் எடுத்து எதற்கு நடித்தேன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது" என்று தெரிவித்துள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
