மகள்கள் அந்த விஷயத்தால் சந்திக்கும் மோசமான விமர்சனம்- குஷ்பு வருத்தம்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த பிரபலம்.
இவர் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்றால் அவருக்காக ரசிகர்கள் கோவில் கட்டி கும்பிட்டுள்ளனர். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
முறைமாமன் உள்ளிட்ட படங்களை தன்னை வைத்து இயக்கிய சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களக்க அவந்திகா மற்றும அனந்திதா என இரு மகள்களும் உள்ளனர்.
குஷ்பு மகள்கள்
சினிமாவில் படங்கள் தயாரிப்பு மற்றும் அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு அண்மையில் தனது மகள்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர், மகள்கள் குழந்தைகளாக இருந்தபோது இருவரும் குண்டாக கொழுக் கொழுக் என்று இருந்ததை அனைவரும் பாராட்டினார்கள்.
ஆனால் வளர்ந்துவிட்ட நிலையில் அவர்களது உருவம் கேலிக்குறியதாக மாறியுள்ளது.
அவர்களது அப்பாவை போலவே நன்றாக வளர்ந்துவிட்டார்கள், உடலும் அதிக குண்டாக காணப்படுவதால் அவர்கள் செல்லும் இடங்களில் பாடி ஷேமிங்கை சந்திப்பதை நான் பார்க்கிறேன்.
ஆனால் இதை நிராகரிக்க தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளதாகவும் குஷ்பூ அந்த பேட்டியில் கூறியுள்ளார்.