வாரிசு பற்றி பொய் சொன்ன குஷ்பூ! அதற்கு இப்போது கொடுத்த விளக்கம்

By Parthiban.A Oct 26, 2022 11:30 AM GMT
Report

வாரிசு

விஜய் தற்போது நடித்து வரும் படம் வாரிசு. அந்த படத்தில் விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக வாரிசு படத்தின் சில புகைப்படங்கள் ரிலீஸ் ஆனது. அவை இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றன. அதில் குஷ்பூ நடிப்பதும் உறுதியாக்கும் வகையில் ஒரு போட்டோ வெளியாகி இருக்கிறது.  

வாரிசு பற்றி பொய் சொன்ன குஷ்பூ! அதற்கு இப்போது கொடுத்த விளக்கம் | Kushboo Sundar Clarifies About Acting In Varisu

குஷ்பூ சொன்ன பொய்

இந்நிலையில் வாரிசு பற்றி குஷ்பூ சொன்ன பொய் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு முன்பே போட்டோ வெளியானபோது 'நான் விஜய்யை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த போது எடுத்த போட்டோ அது. நான் வாரிசு படத்தில் நடிக்கவில்லை' என கூறி இருந்தார்.

தற்போது உண்மை தெரியவந்துவிட்ட நிலையில் அது பற்றி குஷ்பூ விளக்கம் அளித்திருக்கிறார். "தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரட்டும் என காத்திருந்தேன். அதனால் தான் நான் எதுவும் சொல்லவில்லை" என குஷ்பூ கூறி இருக்கிறார். 

அதனால் அவரை நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US