உடல் எடை குறைத்தது எப்படி.. முதல் முறையாக ரகசியத்தை கூறிய நடிகை குஷ்பூ..
குஷ்பூ
80ஸ் 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் குஷ்பூ. உச்ச நட்சத்திரமாக வலம் வந்த இவருக்கு ரசிகர்கள் கோவில் கட்டினார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
நடிகை குஷ்பூ கடந்த சில ஆண்டுகளாக உடல் எடை குறைப்பதில் ஈடுபட்டு வந்தார். அதே போல் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறினார். அதன்பின் அவர் வெளியிட்டு வந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலானது.
இந்த நிலையில், நீங்கள் எப்படி உடல் எடையை குறைதீர்கள், அதனுடைய ரகசியத்தை கூறுங்கள் என ரசிகர்கள் சிலர் நடிகை குஷ்பூவிடம் சமூக வலைத்தளத்தில் கேட்டனர்.
உடல் எடை குறைத்து எப்படி
இதற்கு பதிலளித்த குஷ்பூ, "இந்த பயணம் அற்புதமாக இருந்தது. சில நேரங்களில் சோதனையாகவும், சோர்வாகவும் இருந்தது. ஆனால் நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், பொறுமை மற்றும் விடாமுயற்சி மனப்பான்மையை கைவிடாதீர்கள். ஒரு குறிக்கோளுடன் நடந்து செல்லுங்கள். உங்கள் இலக்கை நோக்கி கவனம் செலுத்துங்கள். வெற்றி கண்டிப்பாக உங்களை தேடி வரும்.
பாதுகாப்பின்மையை அதிகரித்து அனுமானங்களுடன் வாழ்பவர்களுக்கு வயிற்று எரிச்சல் இருக்கும். எனக்கு முழுமையாக புரிகிறது. உங்களுக்கு உதவ நான் செய்யக்கூடிய ஒரு நல்ல அமிலத்தன்மை எதிர்ப்பு மறுத்ததை பரிந்துரைப்பது, கடினமாக உழைக்க சொல்வது மட்டுமே" என பதிவிட்டுள்ளார் நடிகை குஷ்பூ.
உடல் எடை குறைத்து குறித்து குஷ்பூ வெளியிட்டுள்ள இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.