4வது நாள் வசூலில் அடிவாங்கிய குஷி.. சமந்தா படத்திற்கு இப்படியொரு நிலைமையா..
குஷி
வெள்ளிக்கிழமை வெளிவரும் திரைப்படங்கள் முதல் மூன்று நாட்கள், அதாவது வார இறுதி வரை நன்றாக வசூல் செய்தாலும், அடுத்த வாரத்தின் துவங்கும், அதாவது 4வது நாளில் இருந்து வசூல் குறைய துவங்கிவிடுகிறது.
அந்த நிலைமை தான் தற்போது சமந்தாவின் குஷி படத்திற்கும் ஏற்பட்டள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்து கடந்த வாரம் திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் குஷி. இப்படம் நல்ல வரவேற்பை முதல் வாரம் பெற்றது.
வசூலில் அடிவாங்கிய குஷி
இதற்காக தன்னுடைய சம்பளத்தில் இருந்து ரூ. 1 கோடியை மக்களுக்காக கொடுத்தார் விஜய் தேவரகொண்டா. மூன்று நாட்களில் ரூ. 65 கோடி வரை உலகளவில் வசூல் செய்த குஷி படம் 4வது நாள் வசூலில் அடிவாங்கியுள்ளார்.
ஆம், நேற்று மட்டும் ரூ. 3 கோடி மட்டுமே தான் உலகளவில் இப்படம் வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் நான்கு நாட்களில் குஷி படம் ரூ. 68 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாம். நல்ல வரவேற்பை பெற்ற சமந்தாவின் குஷி படத்திற்கு 4வது நாளில் இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

அதிகார குவியலால் மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பு; மாநில அரசுக்கு ரத்த சோகை - முதல்வர் ஸ்டாலின் IBC Tamilnadu
