ரீ-ரிலீஸ் ஆகப்போகும் விஜய்-ஜோதிகாவின் குஷி திரைப்படம்... முதல் நாள் ப்ரீ புக்கிங் கலெக்ஷ்ன்
குஷி படம்
குஷி, தமிழ் சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த ஒரு காதல் திரைப்படம்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய்-ஜோதிகா நடித்த இந்த படத்திற்கு தேவா இசையமைக்க ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். காதல் கதை மையமாக கொண்ட ஹிட் படங்களில் இப்படம் கண்டிப்பாக இடம்பெறும்.
வரிசையாக விஜய்யின் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வரும் நிலையில் வரும் செப்டம்பர் 25ம் தேதி குஷி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாம்.
இப்பட செய்தியாளர் சந்திப்பில் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, குஷி கதையை நான் விஜய்யிடம் சொன்னபோது பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருந்தார். இதனால் அவருக்கு கதை பிடிக்கவில்லை என நினைத்து, வேறு கதை சொல்லட்டுமா எனக் கேட்டேன். ஆனால் வேண்டாம் என்ற விஜய் இதுவே நல்லா இருக்கு, இதையே பண்ணலாம் எனக் கூறினார்.
நல்லா இருக்கு என்பதைகூட இவ்வளவு சிம்பிளாக சொல்கிறாரே என நினைத்ததாக பேசியுள்ளார்.
ப்ரீ புக்கிங்
குஷி படம் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் ஆசையாக பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில் புக்கிங்கும் வேகமாக நடந்து வருகிறது.
இப்படம் முதல் நாள் ப்ரீ புக்கிங்கில் இப்படம் ரூ. 34 லட்சம் வசூலித்துள்ளதாம்.