ரீ ரிலீஸில் பெரிய வரவேற்பு பெறாத குஷி.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்
ரீ ரிலீஸ்
ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பெருகி வருகிறது. அதுவும் கில்லி, சச்சின், 3 ஆகிய படங்களுக்கு ரீ ரிலீஸில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இதில் விஜய்யின் கில்லி மற்றும் சச்சின் ஆகிய படங்கள் ரீ ரிலீஸில் வசூலில் பட்டையை கிளப்பின. இந்த வரிசையில் தற்போது விஜய்யின் சூப்பர்ஹிட் படமான குஷி ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
குஷி
த ளபதி விஜய் - இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா கூட்டணியில் உருவான இப்படம் 2000ஆம் ஆண்டு வெளிவந்தது. 2000ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் குஷி. இப்படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார். தேனிசை தென்றல் தேவாவின் இசையில் இப்படம் உருவானது.
கடந்த 25ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள குஷி படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆம், ரீ ரிலீஸில் இதுவரை இரண்டு நாட்களை கடந்திருக்கும் குஷி, இதுவரை ரூ. 1.5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
இதற்கு முன் ரீ ரிலீஸான கில்லி, சச்சின் ஆகிய படங்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.