Enjoy Enjaami பாடல் சர்ச்சையால் பிரிந்ததா பா.ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி...

pa.ranjith sana
By Jeeva Aug 28, 2021 08:50 AM GMT
Report

சந்தோஷ் நாராயணன் இசையில் தீ மற்றும் அறிவு குரலில் வெளியான Enjoy Enjaami பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து Enjoy Enjaami பாடலை தயாரித்த நிறுவனம் நீயே ஒளி, என்ற பாடலையும் தயாரித்திருந்தது. இந்த பாடலுக்கும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார். மேலும் இப்பாடலை சார்பட்டா பரம்பரை படத்தில் பயன்படுத்தியிருந்தனர்.

மேலும் முன்னணி நிறுவனம் ஒன்று இந்த இரண்டு பாடல்கள் குறித்த விளம்பரத்தில் பாடகர் அறிவை புறக்கணித்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் பதிவிட்டு இருந்தார். அறிவு புறக்கணிக்கப்பட்ட செய்தி பெரியளவில் பேசப்பட்டது.

பின்னர் நீயே ஒளி பாடலில் பணியாற்றியிருந்த Shan Vincent de Paul பா.ரஞ்சித் குறித்து "பா.ரஞ்சித்தின் ட்வீட் மற்றும் அதற்கு வந்த கடுமையான விமர்சனங்களும் தான் என்னை பாதித்தது. அவர் பொறுப்பற்ற முறையில் தமிழ் கலைஞர்களுக்கிடையே பிரிவினையை தூண்டிவிடுகிறார்" என பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனை சந்தோஷ் நாராயணன் மற்றும் பா.ரஞ்சித் இடையே பிரிவினையை உண்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் நெருக்கமானவர்கள் அவர்களுக்கும் கூறும் செய்திகளாலே இந்த பிரச்சனை பெரிதாகுவதாக கூறப்படுகிறது.

பா.ரஞ்சித் இதுவரை இயக்கிய 5 படங்களிலும் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்திருந்தார், ஆனால் பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் புதிய இசையமைப்பாளருடன் பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US