ஹாலிவுட் நடிகருடன் பணியாற்றும் நடிகை குட்டி பத்மினியின் மகள்! போட்டோவுடன் இதோ
குட்டி பத்மினி
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பின் ஹீரோயினாகவும் சில படங்களில் நடித்து இருப்பவர் குட்டி பத்மினி.
அவர் தற்போது படங்களில் நடிப்பதில்லை என்றாலும் தற்போது சினிமா சங்கங்கள், சின்னத்திரை என கவனம் செலுத்தி வருகிறார்.
மகள்கள்
குட்டி பத்மினியின் மூன்று மகள்களும் நன்றாக படித்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்களாம். அவரது முதல் மகள் எழுத்தாளராக பணியாற்றி வருகிறாராம்.
இரண்டாம் மகள் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸுக்கு வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறாராம். மேலும் மூன்றாம் மகள் தற்போது படித்து வருகிறாராம்.
மகள்கள் அங்கே செட்டில் ஆகிவிட்ட நிலையில், குட்டி பத்மினியையும் அவர்களுடன் வந்துவிடும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால் இந்தியாவை விட்டு வர முடியாது என குட்டி பத்மினி கூறிவிட்டாராம்.