கொரோனாவிற்கு பின் பலர் வீட்டில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அப்படி வீட்டில் இருந்தே சம்பாதிக்க ஒரு சிறந்த முடிவு தான் யூடியூப், தங்கள் வீட்டில் நடப்பது, மக்களுக்கு தெரியாத விஷயம் காண்பிப்பது என யூடியூபில் வீடியோக்கள் பதிவிட்டு பலர் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில், யூடியூப் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆன ஒருவரை குறித்து தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அவர் தான் குட்டி TTF.
குட்டி TTF:
குட்டி TTF என்பவர் ஒரு யூடியூபர். இவர் TTF வாசனின் ரசிகர்களால் "குட்டி TTF" என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். TTF வாசனின் பைக் ஓட்டும் வீடியோக்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, அவரும் பைக் ஓட்டத் தொடங்கியுள்ளார்.
இவரின் யூடியூப் சேனலில் பைக் ஓட்டுவது தொடர்பான வீடியோக்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடுகிறார்.
இவரது யூடியூப் சேனலின் பெயர் "Kutty Twin Throttlers" ஆகும். இவர் இந்த சேனலை கடந்த மார்ச் 2022 - ம் ஆண்டு தொடங்கியுள்ளார்.
ஆனால், ரசிகர்கள் அவரை 'குட்டி TTF' என்று அழைத்து வருகின்றனர். இவரது யூடியூப் சேனல் மிகவும் குறைந்த காலத்திலே 5 மில்லியன் subscribers தொட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
நெட் ஒர்த்:
இந்நிலையில், Kutty Twin Throttlers நெட் ஒர்த் தகவல் குறித்து பார்க்கலாம் வாங்க. இந்த Youtube சேனலின் மொத்த நெட் ஒர்த் $ 859K - $ 5.15M இருக்கும் என கூறப்படுகிறது.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
