பவா செல்லதுரை தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளியேற விரும்பும் பெண் போட்டியாளர்- யாரு பாருங்க
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7வது சீசன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.
அதன்பிறகு அடுத்த நாளே பவா செல்லதுரை உடல் நலக்குறைவு காரணமாக வெளியேறினார். ஒரே வாரத்தில் இருவர் வெளியேறியதால் கடந்த வாரம் எலிமினேஷன் ரத்து செய்யப்பட்டது.
போட்டியாளர் வெளியேற்றம்
இந்த வாரம் கடுமையான டாஸ்க்குகள் வைக்கப்படும் நிலையில் இதில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வினுஷாவால் டாஸ்கில் சரியாக ஈடுபட முடியவில்லை.
இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான அவர் தான் வீட்டை விட்டு வெளியேற போவதாக கேப்டன் யுகேந்திரனிடம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் யுகேந்திரன் மற்றும் மாயா ஆகிய இருவரும் வினுஷாவுக்கு ஆறுதல் கூறி தொடர்ந்து விளையாடுமாறு வலியுறுத்துகின்றனர்.