21 வருடத்திற்கு பின்.. விஜய் படத்தில் ஒப்பந்தமான பிரபல நடிகை
விஜய் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி68 படத்தின் பூஜை வீடியோ இன்று வெளியாகி இருக்கிறது. படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற விவரமும் போட்டோவுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது.
நடிகை லைலாவும் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அவர் விஜய் உடன் நடிப்பது முதல் முறை அல்ல.
21 வருடத்திற்கு பின்..
21 வருடங்களுக்கு முன் உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் மற்றும் லைலா தான் நடித்தனர். ஆனால் இயக்குனர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஜய் பாதியில் விலகிவிட்டார். அதன் பிறகு சூர்யாவை வைத்து அந்த படத்தை எடுத்தனர்.
"என்னிடம் இருந்து தப்பி சென்ற நடிகர்" என அப்போது எடுத்த போட்டோவை நடிகை லைலா பகிர்ந்து இருந்தார். அதனை தொடர்ந்து தான் தற்போது தளபதி68ல் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருக்கிறது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
