41 வயதாகும் நடிகை லைலா-வா இது..! லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்திய நடிகை
தமிழில் நந்தா,பிதாமகன், தீனா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லைலா.
இவர் 1996-ல் தெலுங்கில் வெளியான ஏகிரே பாவுரமா படத்தில் தான் முதல் முறையாக நடிகையாக அறிமுகமானார்.
அதன்பின் ஒரு சில ஹிந்தி படங்களிலும் தொடர்ந்து தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்தார்.
பின்னர் படங்களில் பெரும்பாலாக நடிக்காமல் இருந்துவந்த லைலா தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
மேலும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நடன நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்குபெறவிருக்கிறார்.
மெஹ்தி என்பவரை கடந்த 2006-ல் திருமணம் செய்துகொண்ட லைலாவிற்கு இப்போது இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
அவ்வப்போது தனது சமூக வலைதளப்பாக்கத்தில் புகைப்படங்களை அப்லோட் செய்துவரும் லைலா சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டயக்ராமில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு, இப்போவும் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
