காமெடி நடிகரின் மனைவியாக நடிக்கும் லட்சுமி மேனன்.. யார் அந்த நடிகர் தெரியுமா
லட்சுமி மேனன்
சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை லட்சுமி மேனன். இதை தொடர்ந்து வெளிவந்த கும்கி படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
நான் சிகப்பு மனிதன், பாண்டிய நாடு, ஜிகாத்தாண்டா, மிருதன், வேதாளம் போன்ற படங்களில் நடித்து வந்தார். 2016ஆம் ஆண்டு கடைசியாக ரெக்க படத்தில் நடித்திருந்த லட்சுமி மேனன் அதன்பின் தமிழில் படங்கள் நடிக்காமல் இருந்தார்.
கிட்டதட்ட 6 வருடங்களுக்கு பின் மீண்டும் சினிமா பக்கம் வந்த லட்சுமி மேனன் புலிக்குத்தி பாண்டி, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமெடி நடிகருடன் கூட்டணி
இந்த நிலையில், தற்போது மலை சப்தம் ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஹீரோவாகி நடித்து வரும் திரைப்படம் தான் மலை. இப்படத்தில் யோகி பாபுவின் மனைவியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. மலை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
