பாலியல் தொல்லை கொடுத்தார்.. லட்சுமி மேனன் வழக்கில் ட்விஸ்ட்! நடிகை சொன்ன அதிர்ச்சி விஷயம்
நடிகை லட்சுமி மேனன் மற்றும் நண்பர்கள் மதுபான விடுதியில் ஐடி ஊழியர் ஒருவரை காரில் கடத்தி சென்று தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சுமி மேனன் கைதுக்கு பயந்து தலைமறைவாகி விட்டார் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் லட்சுமி மேனன் முன்ஜாமீன் பெற்றார். செப்டெம்பர் 17ம் தேதி வரை அவரை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது.
பாலியல் தொல்லை கொடுத்தார்
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி லட்சுமி மேனன் கூறிய விஷயம் எல்லோருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. அந்த நபர் பாரில் தன்னை ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக லட்சுமி மேனன் கூறி இருக்கிறார்.
"பாரில் இருந்து வெளியில் வந்த பிறகும் பின்தொடர்ந்து வந்து பீர் பாட்டிலால் தாக்கினார். அவரை கடத்தி சென்று தாக்கியதாக கொடுத்த புகார் ஜோடிக்கப்பட்ட ஒன்று. நான் எந்த தவறும் செய்யவில்லை" என லட்சுமி மேனன் கூறி இருக்கிறார்.

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
