நாங்க நிறைய பேசுவோம்.. காதலன் குறித்து முதல் முறையாக பேசிய லட்சுமி மேனன்..
லட்சுமி மேனன்
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையாக மாறியவர் தான் லட்சுமி மேனன். இவர் சசி குமார் நடிப்பில் 2012 -ம் ஆண்டு வெளியான சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து கும்கி, பாண்டிய நாடு, குட்டி புலி அடுத்தடுத்துபல வெற்றி படங்களை கொடுத்து டாப் நடிகையாக மாறினார்.
கடைசியாக இவர் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.
பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லட்சுமி மேனன், தனது முன்னாள் காதலன் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், எனக்கு ஒருவரை பிடித்துவிட்டால் நேரடியாக சொல்லிவிடுவேன். சொல்லியும் இருக்கிறேன். அப்படி சொல்லி அவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் போது அவரை காதலித்தேன். அவரிடம் நிறைய பேசியிருக்கிறேன்.
ஆனால், டேட்டிங் சென்றது கிடையாது. சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருந்தது,என்னால் படிப்பை தொடர முடியவில்லை. மேலும் காதலையும் தொடர முடியவில்லை என்று லட்சுமி மேனன் கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
