பிரபல காமெடி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை லட்சுமி மேனன்.. யாருடன் தெரியுமா
சுந்தராபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இதன்பின், கும்கி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை திரையுலகில் ஏற்படுத்தி தந்தது.
இதனை தொடர்ந்து கார்த்தியுடன் கொம்பன், சித்தார்த்துடன் ஜிகர்தண்டா, அஜித்துடன் வேதாளம், ஜெயம் ரவியுடன் மிருதன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இதன்பின், பட வாய்ப்புகள் பெரிதும் கிடைக்காத காரணத்தினால் திரையுலகில் கொஞ்சம் விலகியே இருந்தார். மேலும் சில மாதங்களுக்கு நேரடியாக டிவியில் வெளிவந்த புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார்.
மேலும் தற்போது கௌதம் கார்த்திக் நடித்து வரும் சிப்பாய் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அறிமுக இயக்குனர் முருகேஸ் பூபதி இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இப்படத்தில், லட்சுமி மேனனுக்கு ஜோடியாக பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்து தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri