10 வசுஷத்துக்கு முன் எப்படியெல்லாம் பேசுனாங்க.. தேசிய விருது வென்ற லக்ஷ்மி ப்ரியா உருக்கமான பதிவு
நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் சினிமாவுக்கு தான் அதிக விருதுகள் கிடைத்து இருக்கிறது. சூர்யாவின் சூரரைப் போற்று படத்திற்கு 5 விருதுகள் கிடைத்தது.
சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், அதில் நடித்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது பற்றி மிகவும் உருக்கமாக லட்சுமி பிரியா பதிவிட்டு இருக்கிறார். இயக்குனர் வசந்த்துக்கு நன்றி கூறி அவர், கனவு நினைவானது போல இருக்கிறது என கூறி இருக்கிறார்.
மேலும் இந்த விருதை தனது அம்மாவுக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்ட அவர், 10 வருடங்களுக்கு முன் நான் பெரிய தவறு செய்வதாக இந்த உலகம் குறை சொன்னது, ஆனால் அம்மா மட்டும் என்னை நம்பினார் என லக்ஷ்மி ப்ரியா கூறி இருக்கிறார்.
My heart is swelling with gratitude and happiness. I JUST WON A NATIONAL AWARD ???#BestSupportingActress#NationalFilmAwards2020 #SivaranjaniyumInnumSilaPengalum #BestTamilFeatureFilm pic.twitter.com/pm0mfTXbt3
— Lakshmipriyaa Chandramouli (@LakshmiPriyaaC) July 23, 2022