சன் டிவியின் புது சீரியல்.. வெளியான ப்ரோமோ இதோ
ரசிகர்களை கவர்வதற்காக டிவி சேனல்கள் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதற்காக சரியான ரேட்டிங் கிடைக்காத தொடர்களை அவசரகதியில் முடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
சன் டிவி தான் ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. கயல், சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல் என பல சீரியல்கள் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.
புது சீரியல்
இந்நிலையில் தற்போது லட்சுமி என்ற புது சீரியலை சன் டிவி அறிவித்து இருக்கிறது. அதில் சஞ்சீவ் ஹீரோவாகவும், ஸ்ருதி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.
திருமணத்திற்கு பின்பும் தனது குடும்பத்தை காப்பாற்ற விரும்பும் பெண்ணாக மகாலக்ஷ்மி, மறுபுறம் வரும் மருமகள் சம்பளத்தை தன்னிடம் கொடுக்கவேண்டும் என நினைக்கும் ஹீரோயினின் அம்மா இருக்கிறார். அதனால் கதை சுவாரஸ்யமாக நகரும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ப்ரோமோ இதோ.
You May Like This Video