Chairஐ தள்ளிவிட்டு செம கோபத்தில் வெளியேறிய லட்சுமி ராமகிருஷ்ணன்... CWC 6ல் பரபரப்பு
குக் வித் கோமாளி 6
விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி.
கடந்த 2019ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்நிகழ்ச்சியின் 5சீசன்கள் முடிவடைந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த 6வது சீசன் விரைவில் முடிவுக்கும் வரப்போகிறது.
இதில் ராஜு, பிரியா ராமன், ஷபானா, நந்தகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்வாகி இருக்கிறார்கள்.
லட்சுமி ராமகிருஷ்ணன்
கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோட் ஸ்பெஷல் எபிசோடாக இருந்தது. காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முந்தைய சீசன் போட்டியாளர்கள் உமா ரியாஸ்கான், கனி, விஜே விஷால், மதுரை முத்து மற்றும் தர்ஷா குப்தா ஆகிய 5 பேர் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்தனர்.
கடைசி எபிசோடில், சுனிதா எப்போதும் போல தனது கோமாளி தனத்தை லட்சமி ராமகிருஷ்ணனிடம் காட்டியுள்ளார்.
அவர் சமைத்து வைத்திருந்த பொருளை சுனிதா மறைத்து வைக்க கோபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பக்கத்தில் இருந்த Chairஐ தள்ளிவிட்டு நிகழ்ச்சி விட்டு வெளியேறுவதாக சென்றார். பின் எப்படியோ போட்டியாளர்கள், கோமாளிகள் சமாளித்து அவரை மீண்டும் சமைக்க வைத்துள்ளனர்.