நடிகை லட்சுமி ராமகிரிஷ்ணனிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல்! அதிர்ச்சி புகார்
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் பெரிய அளவில் பேசப்படும் பிரபலமாக மாறியவர். அவர் நடிகை, இயக்குனர் என பல முகங்களை கொண்டவர்.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது தனது X பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அவரிடம் 3500$ பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் தெரிவித்து இருக்கிறார்.

மோசடி
தனது இன்ஸ்டா பக்கம் முடக்கப்பட்டதாகவும், அதை மீண்டும் பெற 3500 டாலர்கள் செலுத்த வேண்டும் என மிரட்டுகிறார்கள் என அவர் கூறி இருக்கிறார். அது இந்திய ருபாய் மதிப்பில் மூன்று லட்சத்தை விட அதிகம்.
லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவை பார்த்த நெட்டிசன்கள், அந்த பணத்தை செலுத்த வேண்டாம், யாரோ scam செய்கிறார்கள் என அவருக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.
Scam! Dont pay anything!
— Kasturi (@KasthuriShankar) December 14, 2025