தமிழ் சினிமா சிலர் கட்டுப்பாட்டில் இருக்கிறது.. : லட்சுமி ராமகிருஷ்ணன் புகார்
நடிகை, இயக்குனர், டிவி தொகுப்பாளர் என பல திறமைகள் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அவர் நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது ஒரு புது படத்தை இயக்கி இருக்கிறார்.
Are You Okay Baby என்ற அந்த படம் வரும் செப்டம்பர் 22ம் தேதி திரைக்கு வருகிறது. அதில் சமுத்திரகனி உள்ளிட பலர் நடித்து இருக்கின்றனர்.

தமிழ் சினிமா சிலர் கையில்
இந்நிலையில் ஒரு நாளிதழுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்திருக்கும் பேட்டியில் தமிழ் சினிமா தற்போது ஒரு சிலர் தான் சிக்கி இருக்கிறது என கூறி இருக்கிறார்.
படம் வெற்றி பெறுமா இல்லையா என அவங்க தான் சொல்றாங்க. அவர்கள் ஒரு சில படங்களை மட்டும் ப்ரோமோட் பன்றாங்க. அது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.
எல்லா நல்ல படங்களும் மக்களிடம் சென்று சேர வேண்டும். அப்போது தான் மலையாளம் போல இங்கும் நல்ல படங்கள் அதிகம் வரும் என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி இருக்கிறார்.
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri