லால் சலாம் படம் வெற்றி, திடீரென தனது சம்பளத்தை உயர்த்திய விஷ்ணு விஷால்- எவ்வளவு தெரியுமா?
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை என இரண்டு படங்களுக்கு பிறகு பெரிய இடைவேளைக்கு பின் எடுத்துள்ள திரைப்படம் லால் சலாம்.
ரஜினிகாந்த், கபில் தேவ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அண்மையில் ரிலீஸ் ஆகி நல்ல வசூல் வேட்டை தான் நடத்தி வருகிறது.
விஷ்ணு விஷாலுக்கும் வெண்ணிலா கபடிக்குழு, இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற வெற்றி படங்களின் வரிசையில் இப்படமும் இடம்பெற்றுள்ளது.
உயர்த்திய சம்பளம்
விஷ்ணு விஷால்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான மோகன்தாஸ் திரைப்படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்த நிலையில் தான் விஷ்ணு விஷால் அடுத்து ஆரியன் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
லால் சலாம் படம் தனக்கு நல்ல வெற்றியை கொடுக்க அவர் ரூ. 8 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
