ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் முதல்நாள் எவ்வளவு வசூலிக்கும்- கணிக்கப்பட்ட தகவல் இதோ
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வரும் பிரபலம்.
தனுஷை வைத்து 3, கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என இரண்டு படங்கள் இயக்கினார். அதன்பின் அவரது சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வர தற்போது தனுஷுடன் விவாகரத்து பெற்று தனியாக இருக்கிறார்.
இந்த நேரத்தில் அவர் தனது கெரியரில் கவன செலுத்த முடிவு எடுக்க லால் சலாம் என்ற திரைப்படத்தை எடுத்தார். லைகா நிறுவனம் தயாரிக்க ரஜினி சிறப்பு வேடத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் ரஜினியின் காட்சி 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது 45 நிமிடங்களுக்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பட கலெக்ஷன்
லால் சலாம் படத்தின் ப்ரீ ரிலீஸ் அட்வான்ஸ் புக்கிங் படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பை கொடுத்துள்ளதாம். தமிழ்நாட்டை தாண்டி பெங்களூரு, ஹைதராபாத் போன்ற ஏரியாக்களிலும் டிக்கெட் புக்கிங் அமோகமாக நடக்கிறதாம்.
இப்படி விறுவிறுப்பாக நடக்கும் புக்கிங்கை வைத்து இப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் படம் ரூ. 5 கோடி வரை வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
