ரஜினியின் லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
லால் சலாம்
3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதன்பின் இவர் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார்.
இதன்பின் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி, நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
மேலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் இருவரும் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
முதல் நாள் வசூல்
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், முதல் நாள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, லால் சலாம் திரைப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
You May Like This Video

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட இளம்பெண்: பிரபல நடிகையின் சகோதரி குஷ்பூவுக்கு குவியும் பாராட்டுகள் News Lankasri

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
