6 மாதங்கள் கழித்து OTT-யில் வெளிவரும் லால் சலாம்..? எப்போது ரிலீஸ் தெரியுமா
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் முதல் முறையாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் இணைந்து நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த திரைப்படம் லால் சலாம். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெறவில்லை.
OTT ரிலீஸ்?
லால் சலாம் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து 6 மாதங்கள் ஆன நிலையிலும், இப்படத்தை இதுவரை OTT-யில் வெளிவரவில்லை.
இந்த நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி லால் சலாம் OTT-யில் வெளிவருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த செய்தில் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், இது முற்றிலும் பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது.

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri

32 படங்களில் நடித்தவர்.., 15 வயதில் சினிமாவை விட்டு வெளியேறி ஐஏஎஸ் அதிகாரியான நடிகை யார்? News Lankasri
