பாக்கியலட்சுமி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு.. எமோஷ்னல் வீடியோ வெளியிட்ட சுசித்ரா
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு தொடர்.
ஒரு குடும்பத் தலைவியின் கதையாக ஒளிபரப்பாக தொடங்கி ஒரு காலத்தில் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சீரியல் இது. கோபி-பாக்கியாவை ஏமாற்றி மறுமணம் செய்த எபிசோட் எல்லாம் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பானது.
தற்போது கதையில் கோபி-ஈஸ்வரி அவசரப்பட்டு இனியாவிற்கு திருமணம் செய்து வைக்க அதுவே பிரச்சனையாக அமைந்துவிட்டது.
இனியா, நிதிஷிடம் இருந்து எப்படி விவாகரத்து பெறப்போகிறார் என்பது பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகிறது.
எமோஷ்னல்
இந்த வாரத்திற்கான பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ வெளியான போது இறுதி அத்தியாயத்தை நோக்கி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் சுசித்ரா தனது இன்ஸ்டாவில் சீரியல் முடிவது குறித்தும், ரசிகர்கள் கொடுத்த ஆதரவு குறித்தும் பேசி லைவ் வீடியோவில் எமோஷ்னல் ஆகியுள்ளார்.