பல மாதங்களுக்கு பிறகு டிஆர்பி டாப் 5ல் வந்த சிறகடிக்க ஆசை சீரியல்... டாப் 10 சீரியல்களின் விவரம்
தமிழ் சின்னத்திரை தான் இப்போது மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.
திரையரங்குகிற்கு கூட்டம் கூடுகிறதோ இல்லையோ ஆனால் தொலைக்காட்சி சீரியல்களுக்கு அதிக ஆதரவு கிடைக்கிறது.
நாளுக்கு நாள் டிஆர்பியை கூட்ட எல்லா தொலைக்காட்சிகளிலும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. நிறைய புத்தம் புதிய சீரியல்களையும் களமிறக்கி வருகிறார்கள்.
டிஆர்பி விவரம்
வாரா வாரம் டிஆர்பி விவரம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அப்படி கடந்த வாரம் எந்த தொடர் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி அதிக பார்வையாளர்களை பெற்றது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக டாப் 5ல் சன் டிவி தொடர்கள் மட்டுமே இடம்பெற்ற நிலையில் தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை நுழைந்துள்ளது.
இதோ டாப் 10 சீரியல்களின் விவரம்,
- மூன்று முடிச்சு
- சிங்கப்பெண்ணே
- கயல்
- சிறகடிக்க ஆசை
- மருமகள்
- இராமாயணம்
- அன்னம்
- எதிர்நீச்சல்
- பாக்கியலட்சுமி
- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2