TRPயில் தொடர்ந்து சாதனை செய்யும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல்.. சன் டிவி தொடர்களின் நிலை என்ன?

By Yathrika Jul 25, 2024 07:50 PM GMT
Report

சன்-விஜய் டிவி

சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் பெண்களை மையப்படுத்தி சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, இனியா என நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

டிஆர்பியில் கொஞ்சம் சறுக்கினாலும் இந்த தொடர்கள் Non Prime டைமிற்கு மாற்றம் செய்யப்படுகிறது.

அதிலும் சுத்தமாக ரேட்டிங் பெறாத தொடர்களை உடனே தூக்கிவிடுகிறார்கள். 

CWC புகழ் ஜோயா இத்தனை சீரியல்களில் நடித்துள்ளாரா?.. என்னென்ன தொடர் பாருங்க

CWC புகழ் ஜோயா இத்தனை சீரியல்களில் நடித்துள்ளாரா?.. என்னென்ன தொடர் பாருங்க

சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் இடையே டிஆர்பியில் கடும் போட்டி நடந்து வருகிறது. சன் டிவியில் நிறைய தொடர்கள் டாப்பில் வந்தாலும் விஜய் டிவி சிறகடிக்க ஆசை மட்டுமே எப்போதும் டாப் லிஸ்டில் இடம்பெறுகிறது. 

TRPயில் தொடர்ந்து சாதனை செய்யும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல்.. சன் டிவி தொடர்களின் நிலை என்ன? | Last Week Serials Trp Ratings

கடந்த வாரம்

வாரா வாரம் வியாழக்கிழமை என்றாலே முதலில் சின்னத்திரை ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது டிஆர்பி ரேட்டிங்கை தான். அப்படி கடந்த வாரத்தில் எந்த தொடர் டாப் வந்தது, டிஆர்பியில் சாதனை செய்த தொடர்களின் விவரம் வெளியானது. 

அதில் தொடர்ந்து 3 வாரங்களாக தமிழ்நாட்டின் டாப் சீரியல்கள் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்து வருகிறது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல். 

அதேபோல் கடைசி டிஆர்பி ரேட்டிங்கில் 5வது இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி இந்த வாரம் 3வது இடத்தை பிடித்துள்ளது. இதோ டாப் 5 இடத்தில் உள்ள தொடர்களின் விவரம்,

  • சிறகடிக்க ஆசை
  • கயல்
  • பாக்கியலட்சுமி
  • சிங்கப்பெண்ணே
  • மருமகள்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US