சில வாரங்களாக முதல் இடத்தை பிடித்த சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த வார டிஆர்பி ரேட்டிங்... என்ன நிலவரம்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியில் இப்போது கெத்து காட்டி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
இன்றைய எபிசோடில் ரோஹினி தனது மகன் கிரிஷிற்காக டிரஸ் வாங்க அப்போது விஜயாவிடம் சிக்குகிறார். ஆனால் மக்கள் எதிர்ப்பார்த்தபடி ரோஹினி ஏதேதோ கூறி சமாளித்துவிடுகிறார்.
இன்னொரு பக்கம் பந்தயத்தில் தோற்ற மீனா பணத்தை கொடுத்து தோற்றதை ஒப்புக்கொள்கிறார். வீட்டிற்கு புடவையுடன் வந்த முத்து, மீனாவிடம் கியூட்டாக பேசி அவரை சமாதானம் செய்கிறார்.
பின் மீனா கணவர் வாங்கிவந்த புடவையை அப்போதே கட்டி முத்துவை சந்தோஷப்படுத்துகிறார்.
டிஆர்பி ரேட்டிங்
கடந்த சில வாரங்களாகவே டிஆர்பி டாப்பில் இருந்துவந்த சிறகடிக்க ஆசை இந்த வாரமும் சன் டிவி தொடர்களின் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
டிஆர்பியில் டாப் 5ல் வந்துள்ள தொடர்களின் விவரத்தை காண்போம்.
- சிறகடிக்க ஆசை
- சிங்கப்பெண்ணே
- கயல்
- மருமகள்
- பாக்கியலட்சுமி